சிம்பு ஏமாற்றிய 4 தயாரிப்பாளர்கள் – அதிர வைக்கும் தகவல்
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
என்ன சிக்கல்?
தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்,சிம்புவால் இருபது கோடி நட்டம் அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
இந்தப் புகார் குறித்து விசாரிக்கவேண்டும், அதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமுடிவு காணும்வரை சிம்பு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவேண்டாம் என தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திடம் சொல்ல அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.
அதோடு, சிம்பு படக்குழுவினரைத் தொடர்புகொண்டு இந்தச் சிக்கலைத் தீர்க்கும்வரை உங்கள் படப்பிடிப்பில் பங்கேற்கமாட்டோம் என்றும் சொல்லிவிட்டார்களாம்.
இச்சிக்கல் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 2,2021) காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை என்று சொல்லப்படுகிறது.
இதில் சிம்பு கலந்து கொள்வாரா? என்று தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம்,தயாரிப்பாளர் சங்கமே ஒரு படத்தின் படப்பிடிப்பை நிறுத்துவதா? என்கிற சர்ச்சையும் எழுந்திருக்கிறது.தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் தேனாண்டாள் முரளி, அராஜகமாகச் செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இதுதொடர்பாகத் தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் விசாரித்தால்,
தயாரிப்பாளர்கள் மைக்கேல் ராயப்பன் சிம்புவால் இருபது கோடிக்கு மேல் நட்டம் எனப்புகார் கொடுத்தது எல்லோருக்கும் தெரியும், அதோடு,இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ்சந்திரபோஸிடம் ஒரு கோடி வாங்கிப் பலவருடங்கள் ஆகின்றன அதற்கு இதுவரை எந்தப்பதிலும் இல்லை,இவற்றோடு தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் தேனாண்டாள் முரளி சிம்புவுக்கு மூன்றரைகோடி கொடுத்து சில வருடங்கள் ஆகின்றன. அதற்கும் இதுவரை விடையில்லை,இவை மட்டுமின்றி தயாரிப்பாளர் கலைப்புலிதாணுவிடமும் பணம் வாங்கிக் கொண்டு பதில் சொல்லாமல் இருக்கிறார் சிம்பு.
இப்படி நான்கு தயாரிப்பாளர்கள் கொடுத்த புகார் காரணமாக, சிம்பு நடிக்கும் புதிய படம் தொடங்குமுன்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறோம்.படப்பிடிப்பு நடக்கும்போது நாங்கள் தடுக்கவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கம் தயாரிப்பாளர்கள் நலன்களுக்காகப் பேசுகிறது. இது தவறு என்று சொல்கிறவர்கள் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடிகருக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள் என்று அர்த்தம். அவர்களைப் பற்றி நாங்கள் கவலைகொள்ளவில்லை என்கிறார்கள்.











