சினிமா செய்திகள்

தெலுங்கு இயக்குநர்களோடு மந்தகாசச் சிரிப்பு – தமிழர்களைச் சீண்டும் விஜய்சேதுபதி

2021 ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பப் பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

அத்தொடரில் நடித்துள்ள சமந்தா,பிரியாமணி, மைம்கோபி, அழகம்பெருமாள் உள்ளிட்ட தமிழ் நடிகர்களையும் புறக்கணிக்கவேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

இச்சர்ச்சைகளை மீறி அத்தொடர் இன்னும் இருக்கிறது. இதனால் தமிழ் மக்கள் மனம் புண்பட்டுள்ளனர்.

இப்போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையைச் செய்திருக்கிறார் விஜய்சேதுபதி.

ஆம், அந்த தப்பான தொடரை இயக்கிய தெலுங்கு இயக்குநர்கள் ராஜ், டீகே ஆகியோரின் அடுத்த தொடரில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.

இத்தகவலை அந்த இயக்குநர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி நடிகை ராஷிகண்ணாவும், விஜய்சேதுபதியோடு மூன்றாம் முறை இணைகிறேன், இம்முறை இந்தியில் என்று சொல்லியிருக்கிறார்.

தெலுங்கு இயக்குநர்களான ராஜ் மற்றும் டீகே ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்போடு விஜய்சேதுபதியோடு அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். அதில், விஜய்சேதுபதி மந்தகாசப் புன்னகையோடு இருக்கிறார்.

இது, மேலும் தமிழ்மக்களைச் சீண்டும் விதமாக இருக்கிறது என்று கருத்துகள் வருகின்றன.

விஜய்சேதுபதி என்ன பதில் சொல்லப்போகிறார்?

Related Posts