ஜோதிகா நடிக்கும் புதியபடம், அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சூர்யா
17.11.2017 இல் வெளியாகி இந்தியா முழுக்க பரவலான வரவேற்பு பெற்ற வெற்றிப் படம் ‘துமாரி சுலு’.
அறிமுக இயக்குநர் சுரேஷ் திரிவேணி இயக்கியிருந்த அந்தத் திரைப்படத்தில் வித்யாபாலன் முக்கிய வேடத்தில் நடிக்க, மனவ் கௌல், நேகா துபியா, மலிஷ்கா மென்டோன்ஸா ஆகியோரும் நடித்திருந்தனர்.
துமாரி சுலு தமிழில் தயாராகிறது. இந்தியில் வித்யாபாலன் நடித்த இரவு நேர வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். ராதாமோகன் இயக்குகிறார்.
இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் வெளிட்டுள்ளார். படத்தின் பெயர் மற்றும் படத்தில் மற்ற நடிகர்கள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.
ஜோதிகாவின் மறுபிரவேசம் ஒரு மலையாளப்படத்தின் தமிழாக்கமாக இருந்தது. இப்போது ஒரு இந்திப்படத்தின் தமிழாக்கத்தில் நடிக்கிறார். இதுவும் அவருக்கு நல்லபெயரைப் பெற்றுத்தரும் என்கிறார்கள்.











