சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
24 ஏஎம் திரைப்பட நிறுவனம் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன்,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 2017 ஜூன் மாதம் தொடங்கியது.
பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் இமான் இசையில் உருவாகும் இப்படத்தின் இரண்டுகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி (பிப்ரவரி 17) வெளியிடப்பட்டிருக்கிறது.
படத்தின் பெயர் சீமராஜா என்பதோடு படம் 2018 செப்டம்பர் 13 விநாயகர்சதுர்த்தி அன்று வெளியாகும் என்றும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 17 தொடக்கமான நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு வெளியிடப்பட்ட முதல்பார்வை இணையத்தில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.











