செய்திக் குறிப்புகள்

சசிகுமார் நடிக்கும் புதியபடம் – இன்று தொடக்கம்

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இப்போது, ராஜவம்சம், கொம்புவச்சசிங்கம்டா,பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில்,அவர் நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் இன்று தொடங்கியுள்ளது.

அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் *சர்தார்* திரைப்படத்தைத் தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மன் குமார் புரொடக்சன் 5 ஆவது படைப்பாக தயாரிக்கிறார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு கணேஷ் சந்திரா,படத்தொகுப்பு சிவ நந்தீஸ்வரன்,கலை இயக்கம் மிலன்,சண்டைப் பயிற்சி அன்பறிவு.

கிராமப் பின்னணியில் பிரம்மாண்ட, ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்..

Related Posts