பாரதிராஜா குறித்த விமர்சனம் – சந்தோஷ் பி ஜெயக்குமார் விளக்க அறிக்கை
ஆபாச இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கடும் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதில் சொன்ன ஆபாச இயக்குநர், பாரதிராஜாவின் டிக்டிக்டிக் படம் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.
இதனால் பல தரப்பிலிருந்தும் அவருக்குக் கடும் கண்டனங்கள் பறந்தன.
இதனால், பாரதிராஜா குறித்துப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.
அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
இரண்டாம் குத்து படத்தை இயக்கி நடித்துள்ளேன்.அதன் போஸ்டர்கள் டீசருக்கு இயக்குநர் பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளீயிட்டார். அந்த அறிக்கையைப் படித்துவிட்டு வந்த கந்த கனத்தின் வெப்பத்தில் எனது ட்விட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது, அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது.
அதற்குப் பிறகு அவசரத்தில் நாம் இதைச் செய்திருக்கக் கூடாது என்று மனம் கூறியது.ஆகவே நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
தமிழ்த்திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்கள். அவருடைய சாதனைகளில் ஒரு சதவீதமாவது நாம் செய்துவிட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள்.பல்வேறு இயக்குநர்களுக்கு பாரதிராஜா அவர்கள் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றியிருக்கக் கூடாது.
இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள் அனைத்துத் தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என உறுதியளிக்கிறேன்.
நன்றி.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.











