சினிமா செய்திகள்

இரண்டாம் குத்து படத்துக்குத் தடை கோருவோம் – சேரன் ஆவேசம்

ஆபாச இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி நடித்துள்ள படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கடும் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதில் சொன்ன ஆபாச இயக்குநர், பாரதிராஜாவின் டிக்டிக்டிக் படம் குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் பல தரப்பிலிருந்தும் அவருக்குக் கடும் கண்டனங்கள் பறந்தன.

இதனால், பாரதிராஜா குறித்துப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

இந்நிலையில் இயக்குநர் சேரனின் ட்விட்டர் பக்கத்தில் சேது என்பவர், இரண்டாம்குத்து எனும் படம் உங்க திரை உலகுக்கே கலங்கம் கற்பிப்பது. சொரியான் வழியில் free sex culture, முற்போக்குன்னு சொல்லி தலைமுறைகளையே சீரழிக்கிறது. இன்றும் திரைமீது மதிப்பிருக்க காரணம் உங்களைப் போன்ற இயக்குனர்களே.
இதற்கு உங்கள் கண்டனம் தேவை.

என்று சேரனிடம் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்து சேரன் வெளீயிட்டுள்ள பதிவில்…

அந்த இயக்குனரின் அம்மா அப்பா சொல்வார்களா தன் பிள்ளையென. வெட்கக்கேடு வேறன்ன வேண்டும்.. மக்கள் இது போன்ற படங்களை புறந்தள்ளி செருப்படி தரவேண்டும்.. அந்த படத்திற்கு தடைவிதிக்கவும், போஸ்டரை பொதுவெளியில் பயன்படுத்தியற்காக கோர்ட்டில் மன்னிப்பு கேட்கவும் கோருவோம்.

என்று கூறியிருப்பதோடு தமிழக முதல்வரின் ட்விட்டர் கணக்கையும் இணைத்துள்ளார்.

Related Posts