சந்தானத்துக்கு இப்படி ஒரு வேடமா? – புதிய படத்தின் பெயர் மற்றும் தகவல்கள்
நடிகர் சந்தானம், கொரோனா ஊரடங்குக்குப் பின் படப்பிடிப்புகள் தொடங்கியபோது, ஏஒன் படத்தின் இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
அப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12 ஆம் தேதி சென்னையில் நிறைவடைந்தது.
உடனே அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக கும்பகோணம் புறப்பட்டுவிட்டார் சந்தானம்.
கும்பகோணத்தில் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கிய புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
அப்படத்தை புது இயக்குநர் சீனிவாசன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறாராம்.
அந்தப்படத்துக்கு சபாபதி என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்.
சந்தானம் என்றாலே கலகலப்பான பேச்சு அதிரடியான கவுண்ட்டர்கள் என்று இருக்கும்.அதற்கு எதிர்மறையாக இந்தப்படத்தில் அவர் திக்குவாயராக நடிக்கிறார் என்று சொல்கிறார்கள்.
திக்கித் திக்கிப் பேசினாலும் அவருடைய சிறப்பம்சங்கள் நகைச்சுவைகள் ஆகிய எதிலும் குறையிருக்காது என்கிறார்கள்.











