சினிமா செய்திகள்

டான் சிபிச்சக்ரவர்த்தி கேட்ட சம்பளம் – தெறித்து ஓடிய தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற டான் படத்தை இயக்கியிருந்தவர் சிபிசக்ரவர்த்தி. அது அவருடைய முதல்படம். முதல்படமே சுமார் நூறுகோடிக்கு மேல் வசூல் செய்த படமாக அமைந்ததில் அவருக்குப் பெரும் மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சியோடு மகிழ்ச்சியாக இரண்டாவதுபடத்திலேயே ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அமைத்த திரைக்கதை மற்றும் அவருடைய நடவடிக்கைகள் காரணமாக அந்த வாய்ப்பு கைவிட்டுப் போனது.

அந்தப் படத்தைத் தயாரிப்பதாக இருந்த லைகா நிறுவனமும் அவருடைய விரும்பத்தகாத நடவடிக்கைகளால் அவரை வைத்துப் படம் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அவரை வைத்து தெலுங்குப் படம் ஒன்றைத் தயாரிக்க தெலுங்குத்தயாரிப்பாளர் அணுகியிருக்கிறார்.

தொடக்கத்தில் மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது பேச்சுவார்த்தைகள். அடுத்தடுத்த நிலையில் சம்பளம் குறித்த பேச்சுவந்த போது, லைகாவில் எனக்கு ஆறுகோடி வரை சம்பளம் கொடுப்பதாகச் சொன்னார்கள். அது ரஜினி படம் என்பதால் அவ்வளவு சம்பளம் பேசினார்கள். இங்கு அப்படிச் செய்யமுடியாது, அதோடு உங்களுக்காகச் சம்பளத்தைக் குறைத்துக்கொள்கிறேன். எனவே எனக்கு ஒரு கோடி சம்பளம் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

ஒருகோடி என்பதே முறைவு அதனால் அவர்கள் சந்தோசமாக ஒப்புக்கொள்வார்கள் என்பது அவருடைய எண்ணம். ஆனால் நடந்ததோ வேறு.

முப்பது அல்லது நாற்பது இலட்சம் சம்பளம் கேட்பார் என்று எதிர்பார்த்திருந்த தயாரிப்பாளர் இவர் ஒரு கோடி என்று சொன்னதும் பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு வண்டியேறிவிட்டாராம்.

இதனால் தெலுங்குப்படம் இயக்குவதும் தடைபட்டுவிட்டதாம்.

Related Posts