சினிமா செய்திகள்

ரஜினி கேட்ட சம்பளம் – அதிர்ந்த தயாரிப்பு நிறுவனம்

ரஜினிகாந்த் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இந்தப்படத்துக்கு அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை முடிவு செய்யும் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.

இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார் ரஜினி.

அதற்கான சம்பளமாக தொண்ணூறு கோடி கேட்டிருக்கிறார் ரஜினி. 

தயாரிப்பு நிறுவனத்துக்கு அதிர்ச்சி. அவருக்கு அவ்வளவு சம்பளம் கொடுத்து படமெடுத்தால் இறுதியில் நட்டம்தான் என்பதால் தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியிருக்கிறது. 

இதனால் இறங்கி வந்த ரஜினி, எழுபத்தைந்து கோடி சம்பளம் என்று சொல்லியிருக்கிறாராம்.

இதற்கு அந்நிறுவனம் ஒப்புக் கொள்ள வேண்டும் அதோடு இயக்குநர் தொடர்பான ஒரு விவாதமும் இருக்கிறது.

இரண்டும் சரியாக அமைந்தால், ரஜினியை வைத்து இதுவரைபடமெடுக்காத புதிய நிறுவனம் ரஜினியின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் அறிவிப்பு வெளீயாகலாம் என்று சொல்கிறார்கள்.

Related Posts