செய்திக் குறிப்புகள்

காஞ்சனா மகிமை – அசுர வளர்ச்சியில் ராகவாலாரன்ஸ்

உலகம் முழுவதும் அமோக வெற்றி பெற்ற படம் காஞ்சனா.ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கிய அந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

தமிழில் ராகவா லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தை இந்தியில் அக்‌ஷய்குமார் ஏற்கிறார். அண்மையில் வெளியான ரஜினி நடித்த 2.ஓ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் அக்‌ஷய்குமார்.

இங்கு சரத்குமார் நடித்த வேடத்தில் நடிக்க பிரபலமான நடிகரிடம் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியிலும் ராகவா லாரன்ஸே இயக்குகிறார். முதன் முதலாக இந்திப் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட் போகிறார்.

படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நட்சத்திரங்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது என்றாலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க உள்ளது என்கிறார்கள்.

எளிய குடும்பத்தில் பிறந்து தென்னிந்தியா முழுக்க புகழ் பெற்றிருக்கும் ராகவா லாரன்ஸ் இப்போது இந்தித் திரையுலகிலும் கால் பதிப்பது அவருடைய அசுர வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு என்கிறார்கள்.

– ரவி

Related Posts