தடுமாறிய மணிரத்னம் உதவிக்கு வரும் இயக்குநர்கள்
பொன்னியின் செல்வன் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது.
சுமார் நாற்பது நாட்கள் நடைபெற்ற அந்தப்படப்பிடிப்பில் மணிரத்னம் மிகவும் தடுமாறிப்போய்விட்டாராம்.இதனால் தொடக்கத்தில் சில நாட்கள் மிகவும் சொதப்பல் ஏற்பட்டுள்ளது.
அவருக்குச் சரியான உதவியாளர்கள் இல்லை என்பதால் இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டதென்று சொல்கிறார்கள்.
அதன்விளைவாக படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே சென்னையிலிருந்து சர்ஜூனை அழைத்தாராம். அவர் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், ஐரா ஆகிய படங்களின் இயக்குநர்.
இப்போது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கவிருக்கும் நிலையில் மேலும் இரு இயக்குநர்களை உதவிக்கு அழைத்துள்ளாராம் மணிரத்னம்.
அழகம்பெருமாள், சுசிகணேசன் ஆகிய இரு இயக்குநர்களைத்தான் அவர் அழைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அவர்களும் அதற்குச் சம்மதித்து வேலைகளைத் தொடங்கியுள்ளார்களாம்.











