November 5, 2025
செய்திக் குறிப்புகள்

திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘பேரன்பு’

ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல். தேனப்பன் தயாரிக்க, ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், மம்முட்டி, அஞ்சலி, திருநங்கை அஞ்சலி அமீர், ‘தங்கமீன்கள்’ சாதனா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘பேரன்பு’.

நெதர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள ரோட்டர்டாம் 47வது சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு ‘பேரன்பு’ படம் தேர்வாகியுள்ளது.

வரும் 27ம் தேதி ரோட்டர்டாம் நகரின் பாதே திரையரங்கில் படத்தின் முதல் பிரத்தியேகக் காட்சி திரையிடப்பட உள்ளது.

அடுத்து இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட பின் கோடை விடுமுறையில் ‘பேரன்பு’ படம் வெளியாக உள்ளது.

Related Posts