பிப்ரவரி 2ல் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

7 சிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
ஆறுமுககுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் டீசரும், விதவிதமான போஸ்டர்களும், பாடல்களும் படம் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளன.
2017ம் ஆண்டில் வெற்றிகரமான நாயகனாக வலம் வந்த விஜய் சேதுபதி நடித்து இந்த ஆண்டில் வெளிவர இருக்கும் முதல் படம் இது.
பிப்ரவரி 2ம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.