களவாணி 2 படத்தில் இணைந்தார் ஓவியா
சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டில் வெளியான படம் ‘களவாணி’. இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடித்திருந்தார். அந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதன் பிறகு ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது நடிப்பையும் புகழையும் உயர்த்தும் வகையில் எந்தப் படங்களும் அமையவில்லை.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஓவியாவிற்கு ‘பிக்பாஸ்’ வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு என்ன நடந்தது என்பது எல்லாம் உலகம் அறிந்த உண்மை. ஓவர் நைட்டில் அவர் புகழ் வாய்ந்த நடிகையானார்.
இந்நிலையில் பல ஆண்டுகள் கடந்து இயக்குநர் சற்குணம் அவரது ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு தஞ்சாவூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதில் மீண்டும் விமலே நாயகனாக நடிக்கிறார். மேலும் ஓவியாவும் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜூன் மாதத்தின் நடுவில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் ஓவியா பங்கு கொள்ள இருக்கிறார். அவரது காட்சிகள் ஒரே கட்டத்தில் தொடர்சியாக படமாக்கப்பட உள்ளன என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
முதலில் இந்தப்படத்தில் ஓஙியா நடிக்கவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.











