சினிமா செய்திகள் நடிகை

ஜோதிகா இந்தி ரீமேக் படத்தில் நடிக்க இதுதான் காரணம்

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ள திரைப்படம் “காற்றின் மொழி”. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 4-ம் தேதி முதல் துவங்க உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

நடிகை வித்யா பாலன் நடிப்பில், ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “தும்ஹாரி சுலு”. திருமணமான பெண் ஒருவருக்கு வானொலியில் வேலை கிடைப்பதால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி இத்திரைப்படம் கூறுகிறது. இந்த படத்தில் வித்யா பாலனின் கணவராக மானவ் கவுல் நடித்திருப்பார்.

நல்ல வரவேற்பினைப் பெற்ற இத்திரைப்படத்தைத்தான் தமிழில் எடுக்கிறார்கள்.இப்படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கவிருக்கிறார்.

ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிடுவார்களாம்.

ஜோதிகா இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதறகு சென்டிமெண்ட்தான் காரணமாம். நிறைய கதைகள் அவரைத் தேடி வந்தாலும் ரீமேக்கை தேர்வு செய்ததற்கு சென்டிமெண்ட்தான் காரணம் என்கிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகு அவர் திரும்ப நடிக்க வந்தபோது மலையாள ரீமேக்கில் நடித்தார். அது வெற்றி. அதன்பின் அவர் நடித்த படங்கள் சரியாகப் போகவில்லை. எனவே மீண்டும் ரீமேக் படத்தில் நடிக்கிறார் என்கிறார்கள்.

Related Posts