சினிமா செய்திகள்

ஆர்யா படப்பெயரில் ஆச்சரியம் கொடுக்கவிருக்கும் முத்தையா – உண்மை என்ன?

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்திப்பாண்டி ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்போது கார்த்தி, ஷங்கர் மகள் அதிதி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ள விருமன் படத்தை இயக்கியுள்ளார் முத்தையா.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்துக்கு அடுத்து ஆர்யாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் முத்தையா.

அந்தப்படத்தை யானை படத்தைத் தயாரித்த டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார்.

முத்தையா என்றாலே தேவர் சாதி பெருமை பேசும் படங்களை எடுப்பவர் என்று சொல்லப்படுவதுண்டு. அதற்கேற்பவே அவருடைய படங்களின் பெயர் மற்றும் கதைக்களம் ஆகியன அமைந்திருக்கின்றன.

இந்நிலையில் அவற்றிலிருந்து வெளிவந்து ஆர்யா படத்துக்கு காதர் என்று பெயர் வைத்திருக்கிறாராம். இந்தப்படத்தில் இருக்கும் இன்னொரு முக்கியவேடத்தில் நடிக்க மம்முட்டியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

காதர் என்று பெயர் வைத்தாலும் அதற்குள் மறைந்திருக்கும் இரகசியம் முத்தையா மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கும் என்கிறார்கள்.

Related Posts