மோகன்லாலை ஏமாற்றத்துக்கு ஆளாக்கிய ரஜினியின் 2.ஓ
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி உட்பட பலர் நடித்திருக்கும் 2.ஓ படம் நவம்பர் 29 அன்று வெளியாகவிருக்கிறது.
இப்படத்தின் வியாபாரம் இப்போது வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம்.
இப்படத்தை கேரளாவில் வெளியிட நடிகர் மோகன்லால் விரும்பினாராம். அதனால் மற்ற விநியோகஸ்தர்கள் எவ்வளவு தொகை கொடுக்கிறார்களோ அவ்வளவை நான் கொடுக்கிறேன் படத்தைக் கொடுங்கள் என்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் சொல்லியனுப்பிக் கொண்டிருந்தாராம்.
ஆனால் தொடக்கத்திலிருந்தே அணுகி வந்ததோடு தயாரிப்பு நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்ட காரணத்தால் டோமிச்சன் என்பவருக்கு கேரள விநியோக உரிமையைக் கொடுத்திருக்கிறதாம் லைகா.
இவர் கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற புலிமுருகன் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர்.
இப்படத்தின் கேரள உரிமை சுமார் பதினைந்து கோடி என்று சொல்லப்படுகிறது.
அதே தொகையைக் கொடுக்கத் தயாராக இருந்தும் மோகன்லாலுக்குப் படம் கிடைக்கவில்லை என்பதால் அவர் வருத்தத்தில் இருக்கிறாராம்.











