நயன்தாரா கர்ப்பம்? – திரையுலகில் பரபரப்பு
நயன்தாரா இப்போது அஜித்துடன் விஸ்வாசம் சிவகார்த்திகேயனுடன் ஜித்துஜில்லாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படங்களைத் தொடர்ந்து கமலுடன் இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அப்படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டார்.
படத்துக்காகக் கேட்ட தேதிகளை மொத்தமாகக் கொடுக்கமுடியவில்லை என்கிற காரணம் சொல்லப்பட்டதாம்.
ஆனால், படத்தில் குதிரையேற்றம் உள்ளிட்ட சில உடலை வருத்தி நடிக்க வேண்டிய காட்சிகள் இருந்ததால்தான் அவர் விலகிக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது.
உடலை வருத்தி நடிக்கும் காட்சிகளில் அவர் நடிக்க மறுத்ததற்கு `இன்னொரு முக்கிய காரணம் இருப்பதாகவும் ஒரு தகவல் உலவுகிறது.
அவர் கர்ப்பமடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால்தான் அண்மையில் நெருங்கிய நண்பர்களுக்கு விருந்தளித்து திருமணத்தை அறிவித்ததாகச் செய்திகள் வந்தன என்றும் சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட தகவல் திரையுலகில் உலவிக்கொண்டிருந்தாலும் இது உண்மையா? என்பதை நயன்தாரா மட்டும்தான் உறுதிப்படுத்தமுடியும்.











