ஜூலை 26 இல் வெளியாகும் ஆங்கிலப்படம் – இரசிகர்கள் உற்சாகம்
மார்வெல் ஸ்டுடியோஸின் ‘டெட்பூல் & வால்வரின்’ ஜூலை 26 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
டெட்பூல் & வால்வரின் புதிய விளம்பரப்படம் வால்வரினை வெறித்தனமான ஆக்ஷனில் காட்சிப்படுத்துகிறது.
டெட்பூல் மற்றும் வால்வரின் ஆகிய சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி இரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
டெட்பூலாக ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் வால்வரினாக ஹக் ஜேக்மேனும் மீண்டும் வரும்போது, திரையரங்குகள் எப்படி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறும் என்பதை மார்வெல் ஸ்டுடியோஸ் பகிர்ந்து கொள்கிறது.
சமீபத்திய விளம்பரப்படத்தில், இந்த தசாப்தத்தின் மிகப்பெரிய ஆக்ஷன் அதிரடி சண்டையை இரசிகர்களுக்குக் காட்டியுள்ளது.
சூப்பர் வில்லன் சப்ரெடூத் மீண்டும் வால்வரினை எதிர்கொள்ளும்படி இந்த ஆக்ஷன் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
டெட்பூல் கூறியது போல், நாங்களும் மிகப்பெரிய இரசிகர்கள்.
விளம்பரத்தில் பார்த்ததை விட பல மடங்கு பிரம்மாண்டமாக நம் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாக படம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என டெட்பூல் மற்றும் வால்வரின் இரசிகர்களின் நம்பிக்கை.
இந்தப்படத்துக்கு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குக்கார்ர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.











