மாமன் படத்தில் சூரியின் வியப்பூட்டும் செயல் – விவரம்

நகைச்சுவை நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு இணையத் தொடர் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் மாமன்.
இப்படத்தில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப்படத்துக்கு இசை – ஹேசம் அப்துல் வஹாப்,
ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்,கலை இயக்கம் – ஜி.துரை ராஜ்,படத்தொகுப்பு – கணேஷ் சிவா
சண்டைப்பயிற்சி – மகேஷ் மேத்யூ
கருடன் படத்தின் வெற்றிக்குப்பிறகு, லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது.
திருச்சி பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில், ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவைப் பேசும் படைப்பாக இப்படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்குகிறார்கள்.
இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படம் மே 16 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த அறிவிப்போடு இன்னொரு வியக்கத் தக்க தகவலும் வெளியாகியிருக்கிறது.
அது என்னவெனில்?
இந்தப்படத்தின் கதையை நடிகர் சூரியே எழுதியிருக்கிறார் என்பதுதான்.
அவர் கதைநாயகனாக நடித்து இரண்டு படங்கள் வெளியாகியிருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் ஆகிய படங்கள் தாம் அவை.
மூன்றாவது படமாக வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் அவருக்கான கதையை அவரே எழுதியிருக்கிறார் என்பதுதான் வியப்பூட்டும் தகவலாக அமைந்திருக்கிறது.