தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – லைகா தமிழ்க்குமரன் போட்டி
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் தற்போதைய தலைவர் முரளி இராமசாமி தலைமையிலான அணி அப்படியே போட்டியிடவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த அணியில் புதிதாக ஒரு பிரபலம் இணையவிருக்கிறாராம்.
அவர்? லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரி தமிழ்க்குமரன்.
இவர் லைகா நிறுவனத்தின் பொறுப்பாளர் மட்டுமே அப்படியிருக்கும்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எப்படி போட்டியிட முடியும்? என்றால், அவர் ஏற்கனவே தயாரிப்பாளர். தனியாக தயாரிப்பு நிறுவனம் வைத்திருப்பவர் என்கிறார்கள்.
அந்த நிறுவனத்தின் சார்பில் படங்கள் தயாரித்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், இன்சொல் என்கிற சின்ன பட்ஜெட் படமொன்றை விலைக்கு வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
இந்தப்படம் பிப்ரவரி 19 அன்று சில திரையரங்குகளில் வெளியானதாக நாளேடுகளில் விளம்பரம் வந்திருக்கிறது.
அதனால் அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றவராகிவிட்டார்.
அதனால், தேனாண்டாள் முரளி தலைமையிலான அணியில் செயலாளர் அல்லது துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.











