October 16, 2026
செய்திக் குறிப்புகள்

ஐந்து மொழி நடிகர்கள் பங்குபெறும் கலைஞர் 100 விழா – விவரங்கள்

தமிழ்த்திரையுலகின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவிருக்கிறது. சனவரி 6 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அவ்விழா குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு……

தமிழ்தித்ரை உலகில் தனது வசீகரமான வசனத்தால் மக்களைச் சிந்திக்க வைத்த அற்புதமான வசனகர்த்தா டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் அனைத்துத் திரை உலக சங்கங்களும் இணைந்து 6.1.2024 சனிக்கிழமையன்று சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாகக் கொண்டாடுகிறது.

இந்த விழாவில்,தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,
மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள்,கலைஞானி கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தமிழ்திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தெலுங்குப பட உலகிலிருந்து சிரஞ்சீவி, வெங்கடேஷ் , மலையாளப் பட உலகிலிருந்து மம்முட்டி, மோகன்லால், கன்னடப் பட உலகிலிருந்து சிவராஜ்குமார் மற்றும் இந்தித்திரை உலகிலிருந்தும் முன்னணி நட்சத்திரங்கள் என அனைத்து மொழி நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

ஆறுமணி நேரம் நடைபெற இருக்கும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கலைஞர் வசனம் தீட்டிய, பாடல்கள் எழுதிய படங்களில் இருந்து பல புதுமையான காட்சி அமைப்புகள், கலைஞரைப் பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள் அடங்கிய ஆவணப்படங்கள் என பல தரப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் மேடையில் மக்களுக்குக் காட்டப்பட உள்ளன.

இந்த விழாவிற்காக டெல்லியில் இருந்து ட்ரோன்கள் வரவழைக்கப்பட்டு பிரமாண்டமான ஷோக்கள் பரவசப்படுத்த உள்ளன.

இந்த விழவிற்காக 50க்கும் மேற்பட்ட முன்னனி இயக்குநர்கள், 20 க்கும் மேற்பட்ட நடன மாஸ்டர்கள் ரிகர்சல் பார்த்து வருகின்றனர்.

இந்த பிரம்மாண்டமான விழாவிற்காக மிகப்பெரிய மேடை’ 20 ஆயிரம்பேர் அமர்ந்து பார்க்க நாற்காலிகள், 50க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகள் என வேலைகள் மும்முரமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மேற்பார்வையில்,பெப்சி பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

“கலைஞர் – கலைஞர் — 100”
விழாக்குழு

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts