ஹன்சிகாவின் கார்டியன் ரிலீஸ் தேதி முடிவானது
ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் கார்டியன். இந்தப்படத்தில் சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார்.
கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி மற்றும் குருசரவணன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இந்தப்படத்தை, சிம்பு,ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த வாலு, விக்ரம், தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஸ்கெட்ச்,விஜய்சேதுபதி ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விஜய்சந்தர் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் குறுமுன்னோட்டம் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.அதில்,இந்தப்படத்தில் ஹன்சிகா பேயாக நடித்திருப்பது தெரியவந்தது.
நீ கோயில்ல இருந்தாலே கொன்னு பொதச்சுடுவேன். இது என் எடம் என்று பஞ்ச் வசனமெல்லாம் பேசி மிரட்டியிருந்தார் ஹன்சிகா.
அந்த குறுமுன்னோட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏற்கெனவே அரண்மனை படத்தில் ஹன்சிகா பேயாக நடித்திருந்தார். அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதுபோலவே இந்தப்படமும் பெரிய வெற்றி பெரும் திரைத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்நிலையில் இப்போது இந்தப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.
இப்படத்தை எதிர்வரும் சர்வதேச மகளிர் நாளான மார்ச் 8 அன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். அந்நாளில் படத்தை வெளியிடுவதற்கேற்ப வேகமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.
ஒரு பெண்ணை முதன்மையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் பெண்களின் நலன், பெண்களின் பாதுகாப்பு, பெண்களின் உரிமை ஆகியனவற்றைப் பேசும் வண்ணம் இருக்கும் என்பதில் மாற்றமிருக்காது. இப்படத்தை
படத்தை மகளிர்நாளில் வெளியிடுவது சாலப்பொருத்தம்.
பல வெற்றிப்படங்களை இயக்கிய விஜய்சந்தர் தயாரிப்பு, இயக்கிய முதல்படமே வெற்றிப்படம் என்கிற பெருமையோடு இருக்கும் சபரி – குருசரவணன் ஆகியோர் இயக்கம் ஆகியன பல சாதக அம்சங்களை இப்படம் கொண்டிருக்கிறது. அதனால் இந்தப்படமும் நிச்சய வெற்றிப் படமாக இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கையாக இருக்கிறார்கள்.
அதோடு வேறு பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இப்படம் வெளியாவது நல்லது என்பது வியாபார வட்டத்தினரின் கருத்து.
இப்படிப் பல வகைகளிலும் சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது இப்படம் என்பதே நல்ல விசயம்தான்.











