செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியால் தடைபட்ட படம் – பெண் தயாரிப்பாளர் தகவல்

பிக் பாஸ் 3 புகழ் தர்ஷன், சனம் ஷெட்டி, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் மற்றும் பலர் நடிக்கும் படம் கேகி.ஜி.ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

‘மேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வையும் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கலந்து கொண்ட பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பாத்திமா பாபு பேசும்போது,,,,,

மேகி படத்தைத் தயாரிக்கும் சனம் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது நடிகர் கமல்ஹாசனிடம் இந்நிகழ்ச்சியில் நீங்கள் யாராக இருக்க விரும்புவீர்கள் என்று கேட்டபோது, தர்ஷனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். அதன்பிறகு தான் நான் தர்ஷனைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ‘குறை ஒன்றும் இல்லை‘ என்ற பாடல் வரிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறான் என்பது புரிந்தது. நிச்சயம் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளனாக வருவான்.

என் வீட்டிலும் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். தர்ஷன்
பிக் பாஸ் -3 யிலிருந்து வெளியே வந்ததும் என்னுடைய மகனாக தத்தெடுக்கப் போகிறேன்.

தற்போதுள்ள சூழலில் திரைப்படம் தயாரிப்பது என்பது சவாலான விஷயம். அதைத் துணிச்சலாக சனம் ஷெட்டி செய்திருக்கிறார். தர்ஷனை தேர்ந்தெடுத்தது புத்திசாலித்தனமான விஷயம். அவரிடம் ஒரு நாயகனுக்கு உரித்தான அனைத்தும் இருக்கிறது. இன்று முதல் பார்வை மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. படப்பிடிப்பு மேகாலயா போன்ற இடங்களுக்குச் சென்று நடத்தவிருக்கிறார்கள் என்றார்.

நாயகி சனம் ஷெட்டி பேசும்போது…..

சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக ‘மேகி’ இருக்கும் என்பதால் இப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

தர்ஷனை முதல்முறை விளம்பர படப்பிடிப்பில் தான் பார்த்தேன். அங்கு பலரும் இவர் பார்ப்பதற்கு கதாநாயகன் மாதிரி இருக்கிறார் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவரிடம் அணுகி ஆடிஷனுக்கு வாங்க என்று அழைத்தேன். நான் நினைத்தது போலவே தர்ஷன் பொருத்தமாக இருந்தார்.

அவர் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வெளியே வந்ததும் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும்.

மேலும், பல பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அனைவரின் இதயத்தையும் கவர்ந்தது தர்ஷன் மட்டும் தான். படப்பிடிப்பிலும் அப்படித் தான் இருந்தார். எங்கள் அனைவரையும் கவர்ந்தார். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியின் தலைப்பு வெற்றியாளராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். கதைப்படி கதாநாயகி மேகாலயாவைச் சேர்ந்த பெண் என்பதால் அங்கு படப்படிப்பு நடத்தினோம்.

அனிதா அலெக்ஸ் தயாரிப்பில் ‘எதிர்வினை ஆற்று’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். அப்படத்தின் பாடலும் விரைவில் வெளியாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 14 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், தயாரிப்பு என்று வரும்போது பல தடைகளைத் தாண்டி வரவேண்டும் என்கிற அனுபவம் கிடைத்தது. இப்படத்திற்கு எனக்கு பக்கபலமாக இருக்கும் என்னுடைய கோ தயாரிப்பாளர் திருவிற்க்கு நன்றி கூற வேண்டும்.

நடிகர் பாண்டியராஜனை அணுகி இப்படத்தில் பணியாற்ற அழைத்தோம். அவரும் மேகாலயா வரை வந்து சாப்பாடு, போக்குவரத்து போன்ற சிரமங்களுக்கிடையேயும் எங்களுடன் சகஜமாக குடும்பத்தில் ஒருவர் போல் பழகினார். எனக்கும் அவருக்கும் இப்படத்தில் நிறையக் காட்சிகள் இருக்கின்றன. அவரை எதிர்க்கும் காட்சிகளில் நான் கொஞ்சம் பயந்தேன். ஆனால், அவர் வசனத்தில் என்ன உள்ளதோ அதைத் தயங்காமல் பேசு என்று என்னை ஊக்குவித்தார்.

பாத்திமா பாபு என் அழைப்பை ஏற்றுக் கொண்டு இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்ததற்கு நன்றி என்றார்.

Related Posts