சினிமா செய்திகள்

வட போச்சே – இயக்குநர் ஷங்கர் ஏமாந்த கதை

டிராஃபிக் ராமசாமி என்ற படத்தின் பாடல்கள்
வெளியீட்டு விழா சென்னையில் ஜூன் 11 அன்று நடைபெற்றது,

பாடல்களை கவிஞர் வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.

விழாவில், இயக்குநர் ஷங்கர் பேசும் போது,

இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த
மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான்
மனசுக்குள் கை தட்டியதுண்டு.

இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன்.
எனக்கும் அப்படி ஆசை இருந்தது.

இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான
அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட
நினைத்தேன்.

எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட
போச்சே என்ற ஏமாற்றம். இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன் என்றார்.

Related Posts