இளையராஜா இசையை முழுமையாக நிராகரித்த இயக்குநர்
காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் படம் கடைசி விவசாயி.
இந்தப் படத்தில் நல்லாண்டி என்ற பெரியவர் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், இந்திய திரையுலக வரலாற்றில் முதல்முறையாக ஒரு நிகழ்வு இப்படத்தில் நடந்துள்ளது.
ஆம், இப்படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜா. பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகள் உட்பட எல்லா வேலைகளையும் அவர் முடித்துக் கொடுத்துவிட்டாராம்.
அதன்பின் படம் பார்த்த இயக்குநர் மணிகண்டனுக்கு அது திருப்தியாக இல்லை என்று சொல்லப்படுகிறது. இளையராஜாவிடம் திருத்தங்கள் சொல்லி வாங்கமுடியவில்லையாம்.
இதனால், அதிரடியாக இளையராஜா இசையை மொத்தமாக நீக்கிவிட்டாராம்.அதன்பின் சந்தோஷ் நாராயணனை வைத்து பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகள் நடத்தி வருகிறாராம்.
இளையராஜாவின் திரைப்பயணத்தில் இதுவரை இப்படி நடந்ததில்லை என்பதால் விசயம் தெரிந்தவர்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.











