November 5, 2025
சினிமா செய்திகள் நடிகர்

துப்பாக்கிச்சூட்டில் தனுஷ் ரசிகர் பலி – தனுஷ் கண்ணீர்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இதனால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

அவர்களில் நடிகர் தனுஷ் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவரும் பலியாகியிருக்கிறார்.

இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்ததோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

அவருடைய ட்வீட்டில்…..

துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வேதனையுடன் இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Related Posts