ஒரே நாளில் வெளியாகும் ஆறு படங்கள்!

தீபாவளி தினத்தன்று விஜய் நடிப்பில் ‘பிகில்’ மற்றும் கார்த்தி நடிப்பில் ‘கைதி’ வெளியானது.
இந்த இரண்டு படங்களுக்கு கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்த வாரம் எந்த படமும் வெளியாகவில்லை. பின்னர், நவம்பர் 15ஆம் தேதி தான் பெரிய பட்ஜெட் படங்களான விஷாலின் ‘ஆக்ஷன்’ மற்றும் விஜய்சேதுபதியின் ‘சங்க தமிழன்’ படங்கள் வெளியானது.
கடந்த வாரம் துருவ் விக்ரம் நடிப்பில் ஆதித்ய வர்மா படமும், மதுமிதா இயக்கத்தில் கேடி படமும் வெளியானது.
அடுத்த வாரமான நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸூக்காக நீண்டநாளாக காத்திருக்கும் தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் ஆரவ் நடிப்பில் ‘மார்கெட் ராஜா’ படங்கள் வெளியாகிறது.
அதற்கு அடுத்த வாரமான டிசம்பர் 6ஆம் தேதிக்கு, ஆறு படங்கள் ரிலீஸூக்கு தயாராகி வருகின்றன. அதாவது, கால்பந்து வீரராக கதிர் நடிக்கும் ‘ஜடா’ படமும், பா.ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ், ஆனந்தி நடிப்பில் இரண்டாம் ‘உலகப் போரின் கடைசி குண்டு’ படமும், ஹரிஸ் கல்யாண் நடிப்பில் ‘தனுசு ராசி நேயர்களே’, சுந்தர்.சி நடிப்பில் த்ரில்லர் படமான ‘இருட்டு’, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் ‘கேப்மாரி’ மற்றும் த்ரில்லர் திரைப்படமாக ‘வி1’ என ஆறு படங்கள் ரிலீஸாக இருப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த சில மாதமாகவே வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று படங்களே வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி அதிக படங்கள் ரிலீஸூக்கு தயாராகியிருப்பது குறிப்பிடத்தக்கது. வசூலை மனதில் கொண்டு சில படங்கள் பின்வாங்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.