மீண்டும் தர்பார் படப்பிடிப்பு – திரையுலகில் பரபரப்பு
ரஜினி நடிக்கும் தர்பார் படம் இன்னும் 25 நாட்களில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடக்கின்றன.
ரஜினி டப்பிங் பேசி முடித்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.
அண்மையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
எல்லா வேலைகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் திடீர்
மாற்றம் நிகழ்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆம், படத்தை மொத்தமாகப் பார்த்த பிறகு இன்னொரு பாடல் இருந்தால் நல்லது என அனைவரும் முடிவு செய்தார்களாம்.
அதனால் புதிதாக ஒரு பாடலை உருவாக்கி, அதன் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களாம்.
ரஜினி நயன்தாரா ஆகியோர் பங்கு பெறும் இப்பாடலின் படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கும் என்கிறார்கள்.
கடைசி நேரத்தில் நடக்கும் இந்நிகழ்வு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.











