செய்திக் குறிப்புகள்

தமிழ்த்திரையுலகில் புத்தம்புது முயற்சி -மே 1 ஆம் தேதி தொடக்கம்

நூற்றாண்டு கண்ட தமிழ்த்திரையுலகில் இதுவரை இல்லாத புதுமுயற்சியாக, தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் அமையவிருக்கிறது.

இதன் தலைவராக இருக்கும் வைசாலி சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.நான் தலைவர் வைசாலி சுப்பிரமணியன், செயலாளர் ஈஸ்வரி.வி.பி., துணைச் செயலாளர் மீனா மருதரசி .எஸ், பொருளாளர் கீதா.எம், துணைத் தலைவர் ஏஞ்சல் சாம்ராஜ்.

நாங்கள் ஐந்து பேரும்தான் செயற்குழுவாக இருக்கிறோம்.இதனுடைய வேலைகள் கடந்த ஆறு மாத காலங்களாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதை அதிகாரப்பூர்வமாக மே 1 அன்று ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இது தொடர்பாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி சார் கிட்ட பேசினோம், அவர் நல்ல விஷயம் நீங்க பண்ணுங்க என்றார்.

இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் சார் எங்களை வாழ்த்தினார் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவர் பி.சி.ஸ்ரீராம் சார் வாழ்த்துக்கள் சொன்னார்.

இந்த விழாவிற்கு பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன், சத்யராஜ், ரோகினி, ரேவதி, சச்சு அம்மா, புஷ்கர் காயத்ரி மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், கீதா குருவப்பன் (sound engineer) இவர்களெல்லாம் விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

ஊடகங்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும்.விழாவில் தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பாக ஒரு காலாண்டு மாத இதழ் வெளியிடுகிறோம். இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் ஈஸ்வரி.வி.பி. (மிஸ்கின் அசோசியேட்).

இந்த தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்திற்கு நிறைய பெண்கள் வரவேண்டும்.100 வருட தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இது ஒரு வரலாறாக இருக்கும், அடுத்த தலைமுறைகள் இதில் வரவேண்டும் என்பதற்காக போடப்பட்ட அடித்தளம் இது.இதற்கு உங்களுடைய ஆதரவும் வாழ்த்துகளும் எங்களுக்கு தேவை,நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்த்திரையுலகில் உள்ள பெண்கள் தொடங்கும் புது அமைப்புக்கு தென்னிந்திய என்று பெயர் வைப்பது ஏனென்று தெரியவில்லை.

Related Posts