September 25, 2026
Home Archive by category விமர்சனம் (Page 92)

விமர்சனம்

விமர்சனம்

கஜினிகாந்த் – திரைப்பட விமர்சனம்

இந்தியா மீது 17 முறை படையெடுத்தவர் கஜினிமுகமுது. விடாமுயற்சிக்கு உதாரணமாக அவரைச் சொல்வார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், மறதிக்காரரை மையமாகக் கொண்ட கதைக்கு கஜினி என்று பெயர் வைத்தவுடன், கஜினி என்றால் மறதிக்காரர் என்ற அடையாளம் வந்துவிட்டது. கஜினிகாந்த் அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
விமர்சனம்

ஜுங்கா – திரைப்பட விமர்சனம்

தாத்தா லிங்காவும் அப்பா ரங்காவும் பெயர் பெற்ற தாதாவாக இருந்தும் பரம்பரை சொத்தை இழந்துவிடுகிறார்கள். அதை ஜுங்கா எப்படி மீட்டெடுக்கிறார் என்பதை நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். டான் டாவடிக்கக் கூடாது என்கிறார் விஜய்சேதுபதி. அவர் சொல்லாமல் விட்டது டான் படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது. பொள்ளாச்சியிலிருந்து சென்னை வந்து 2457 கோடிக்குச்
விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம் – திரைப்பட விமர்சனம்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் பாரதி, உழவுக்கும் உறவுக்கும் வந்தனம் செய்வோம் என்கிறார் பாண்டிராஜ். இரண்டு மனைவிகள் ஐந்து பெண் குழந்தைகள் என்று வாழும் பெரிய குடும்பஸ்தர் சத்யராஜூக்குக் கடைசியாக கார்த்தி பிறக்கிறார்.அவர்தான் கடைக்குட்டி சிங்கம் கார்த்தி. படத்தின் பெயருக்கு நியாயம் செய்தாயிற்று. பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்காத அவர் பேராசையுடன் விவசாயம்
விமர்சனம்

தமிழ்ப்படம் 2 – திரைப்பட விமர்சனம்

பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். இதில் தமிழ்ப்படம் 2 இன் இயக்குநர் அமுதன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். ரஜினி, கமல், விஜய், அஜீத்,விக்ரம், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உட்பட எல்லா நடிகர்களின் படங்களிலும், அந்தப் படங்கள் வெளியான காலத்தில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளைத் தொகுத்து
விமர்சனம்

மிஸ்டர் சந்திரமெளலி – திரைப்பட விமர்சனம்

அப்பா கார்த்திக்கும் மகன் கவுதம்கார்த்திக்கும் இணைந்து நடித்திருக்கிற படமென்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் குறை வைக்கவில்லை. கார்த்திக் ஏன் தொடர்ந்து நடிக்காமல் போனார்? என்று கேட்க வைத்துவிட்டார். படத்தில் நாயகனின் அப்பா என்று அவரைச் சொல்ல முடியாது அவர்தான் நாயகன். முழுக்கை சட்டையை முழுமையாக விட்டு பட்டன் போட்டுக் கொண்டு அவர் வரும் அழகு வருஷம் 16, மெளனராகம்
விமர்சனம்

டிக் டிக் டிக் – திரைப்பட விமர்சனம்

200 டன் எடையுள்ள விண்கல் ஒன்று இந்தியாவை ஒட்டிய கடல் பகுதியில் விழப்போகிறது. அது விழுந்தால் இந்தியாவின் வரைபடமே மாறிவிடும், 4 கோடி பேர் மடிவார்கள் என்கிற நிலை. இதை இந்திய விண்வெளி ஆய்வு மையம் எவ்வாறு கையாள்கிறது? என்பதுதான் டிக் டிக் டிக். இந்த படபடப்பான சூழலை மட்டும் வைத்துக்கொண்டு தமக்குத் தெரிந்த அளவில் தாறுமாறாக விளையாடியிருக்கிறார்கள். நல்லவன், மகன் மீது அளவுகடந்த
Uncategorized விமர்சனம்

ஆந்திரா மெஸ் – திரைப்பட விமர்சனம்

ஆண்களின் இயக்கம் எல்லாம் பெண்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதை பல நிகழ்வுகளின் மூலம் சொல்லியிருக்கும் படம் ஆந்திரா மெஸ். உன்னால மீனுக்கு பொறி கூட வாங்கிப்போட முடியாது என்று காதலிக்கும் பெண் சொன்ன ஆந்திரத்தில் வரதுவாக நடித்திருக்கும் ஏ.பி.ஶ்ரீதர் எடுக்கும் முடிவால், அவர் உட்பட ராஜ்பரத்,மதி,பாலாஜி ஆகிய நான்கு பேரின் வாழ்க்கை திசை மாறுகிறது. ஊரை விட்டே போகிறார்கள். போன
விமர்சனம்

அஜித்தின் விவேகம் படத்துக்கு இணையான ரேஸ் 3

விவேகம் படத்திற்கு இணையான இந்தியத் திரைப்படம் எது? அஜீத் நடித்த விவேகம் படத்திற்கு இணையாக ஒரு படம் வருவது கடினம் என்றாலும், ஏறக்குறைய அந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறது Race – 3. ஒரு காட்சியில் ஒரு பெரிய படைப் பிரிவே சல்மான்கானைத் துரத்துகிறது. சுட்டுத்தள்ளுகிறது. மனிதர் சிறு காயங்களோடு தப்புகிறார். மற்றொரு காட்சியில் சல்மான்கான் செல்லும் வண்டி மலை உச்சியில்
விமர்சனம்

கோலிசோடா 2 – திரைப்பட விமர்சனம்

எளிய மனிதர்களின் வாழ்வில் வலியவர்கள் எப்படி விளையாடுகிறார்கள்? என்பதற்கும், ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிட்டால் ஓர் நொடிக்குள் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் போய் ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா நீ என்கிற பாரதிதாசன் வரிகளுக்கும் விஜய்மில்டன் கொடுத்திருக்கும் காட்சி வடிவம்தான் கோலிசோடா 2. சிறந்த விளையாட்டு வீரனாகி அதன்மூலம் நல்ல வேலைவாய்ப்பை அடைய நினைக்கிற இசக்கி பரத்,
விமர்சனம்

காலா என்கிற கரிகாலன் – திரைப்பட விமர்சனம்

மும்பையில் தமிழர்கள் பெருமளவு வசிக்கும் தாராவி பகுதியை தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் அபகரித்து தம் அதிகாரத்தை நிலைநிறுத்த நினைக்கும் அதிகார வர்க்கத்துக்கும், நிலத்தை வாழ்வாகக் கருதும் உழைக்கும் வர்க்கத்துக்குமான போராட்டம் தான் காலா. உழைக்கும் மக்களுக்குத் தலைவராக விளங்கும் ரஜினியின் பெயர் காலா என்கிற கரிகாலன் என்பதால் படத்தின் பெயர் காலா. சூப்பர்ஸ்டார் என்கிற