Home Archive by category செய்திகள் (Page 245)

செய்திகள்

சினிமா செய்திகள்

அட்லிக்குக் கிடைத்த அடுத்த ஹீரோ – ஆச்சரியத்தில் கோடம்பாக்கம்

விஜய்யின் பிகில் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் அட்லீ. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது. 2019 தீபாவளி நாளில் இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்காகத் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதற்கு மத்தியில் அட்லி, இந்தி நடிகர் ஷாருக்கானை
சினிமா செய்திகள்

காப்பான் படத்தின் தெலுங்குப் பெயர் வெளியாவதில் தாமதம் ஏன்?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘காப்பான்’. இந்தப் படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நாயகியாக ஆர்யா மனைவி சாயிஷா நடித்துள்ளார். இந்தப் படத்தில் மோகன்லால் இந்தியாவின் பிரதமராகவும், அவரின் பாதுகாப்புக்கு இருக்கும் உயர் காவல் அதிகாரியாக சூர்யாவும் நடிக்கின்றனர். இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும்
சினிமா செய்திகள்

மிகப் பெரிய ஏமாற்றம் – விஜய்சேதுபதி படம் குறித்து அமலாபால் வருத்தம்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர், விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், ‘மீகாமன்’, ‘தடையறத் தாக்க’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, வில்லனாக நடிக்கிறார். இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா
சினிமா செய்திகள்

பிரபல நடிகை காலமானார் – திரையுலகம் கண்ணீர்

பணமா பாசமா படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயநிர்மலா.இவர் தமிழ் தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் சுமார் 200 படங்களில் நடித்தவர். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு ஹைதராபாத் காண்டினென்ட்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயநிர்மலா மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 73. நடிப்பு மட்டுமின்றி 44 படங்களை இயக்கியவரான
சினிமா செய்திகள்

கலைப்புலி தாணுவுக்கு இன்னொரு படம் – தனுஷ் முடிவு

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில்
சினிமா செய்திகள்

யுவன் கொடுத்த ஒரு கோடி – சிந்துபாத் கடைசி நேர நிகழ்வுகள்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அருண்குமார் நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் இணைந்திருக்கும் படம் சிந்துபாத். இந்தப்படத்தில் நாயகியாக அஞ்சலி நடித்திருக்கிறார். விஜய்சேதுபதியின் மகன் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்துக்கு இசை யுவன்ஷங்கர்ராஜா. இப்படம் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.
சினிமா செய்திகள்

சிந்துபாத் ரிலீஸ் விவகாரம் – விஜய்சேதுபதி வருத்தம்

விஜய்சேதுபதி அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் சிந்துபாத். இப்படம் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. படத்தைத் தயாரித்திருக்கும் ராஜராஜன் மற்றும் படத்தில் இணைந்திருக்கும் வன்சன் மற்றும் கிளாப் போர்டு சத்யா ஆகிய மூவருக்கும் தனித்தனியாகச் சிற்சில சிக்கல்கள். அவற்றின் காரணமாகப் படம் வெளியாவது தள்ளிப்
சினிமா செய்திகள்

விஜய்யா? பிரபாஸா? – குழப்பத்தில் இயக்குநர் ஷங்கர்

இயக்குநர் ஷங்கர், கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தைத் தொடங்கினார். தொடங்கியதோடு நின்றிருக்கிறது. அது மேற்கொண்டு வளர்வதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து கொண்டேயிருக்கின்றன என்கிறார்கள். இந்நிலையில் ஷங்கர் அதிரடியாக அடுத்த படத்தைத் தொடங்கத் திட்டமிடுகிறார் என்று சொல்லப்பட்டது. இந்தியன் 2 வை அப்படியே விட்டுவிட்டு முதல்வன் 2 படத்தைத் தொடங்கத் திட்டமிட்டாராம். இந்தப்படத்தைத்
சினிமா செய்திகள்

300 படங்களில் முதலிடம் – 3 விருதுகளைப் பெற்ற குறும்படம்

தாய்லாந்தில் நடைபெற்ற குறும்பட விழாவில் 300 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் சிறந்த குறும்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள குறும்படம் பாசிட்டிவ் (positive). 1. Foriegn Language Award 2. Audience Online Award 3. Audience Stadium Award ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது பாசிட்டிவ். ஒரு இளம்பெண் காதலிக்கிறார். கல்யாணம் செய்வதற்குள் கர்ப்பம் ஆகிவிடுகிறார். கல்யாணம் செய்ய
சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் ரஜினி படம் நீக்கம் – கமல் சொன்னாரா?

விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 23 முதல் ஒளிபரப்பைத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி. முதலிரண்டு பாகங்களைப் போலவே மூன்றாம்பாகத்தையும் நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு, சில பத்திரிகையாளர்களை பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். பதிஅனைந்து பேர் கொண்ட அந்தக்குழு ஒருநாள் அவ்வீட்டில் தங்கியிருந்தது. நேற்று பிக்பாஸ்