சினிமா செய்திகள்

ரவிமோகனின் ப்ரோகோட் படத்தின் புதியபெயர் – விவரம்

ஜெயம்ரவி என்கிற பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் ரவி மோகன், ரவி மோகன் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார்.ஆகஸ்ட் 26,2025 அன்று நடந்த அதன் தொடக்கவிழாவில் இரண்டு புதியபடங்கள் அறிவிக்கப்பட்டன.

அவற்றில் ஒரு படத்தை ரவிமோகனே இயக்குகிறார்.அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ஆர்டினரி மேன் என்கிற படம், இயக்குநர் கார்த்திக்யோகியின் இயக்கத்தில் ரவிமோகன் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் ப்ரோகோட் திரைப்படம் ஆகிய இரண்டு ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர்.

இவற்றில், கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன் உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட அந்தப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு மட்டும் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதேநேரம், ப்ரோ கோட் படம் அறிவிக்கப்பட்ட உடனே, ப்ரோ கோட் என்கிற தலைப்பை உபயோகிக்கக் கூடாது என்று டெல்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.அந்தப்பெயரில் ஒரு மதுபானம் விற்பனையில் இருப்பதால் அந்தப்பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்பது அவர்களுடைய வாதம்.

அது மதுபானம்,இது திரைப்படம் என்று ரவிமோகன் தரப்பில் வாதிடப்பட்டது.பல அமர்வுகளாக நடந்த விசாரணைகளைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் இரண்டு தரப்புக்கும் இடையே விரைவில் சமரச ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.அதனால் அந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்லப்பட்டது.

என்னமாதிரியான சமரசம்? என்று யாரும் வெளிப்படுத்தவில்லை.

இந்நிலையில், ஏற்கெனவே வெளியிடப்பட்ட படத்தின் அறிமுகக் காணொலியில் இருந்த ப்ரோகோட் என்கிற பெயரை நீக்கியிருக்கின்றனர்.இதனால்,அந்தப்படத்தின் பெயரை மாற்ற முடிவு செய்திருப்பது தெரியவந்தது.

அது உண்மைதான் என்றும் ப்ரோகோட் பெயரை மாற்றி படத்துக்குப் புதியபெயரை அவர்கள் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்றும் திரையுலகினர் மத்தியில் சொல்லப்படுகிறது.

இப்போது அந்தப்படத்துக்கு, ப்ரோ க்ளப் என்று பெயர் வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.இந்தப்பெயரை அறிவிக்கும் முன்பே,அந்தப் பெயர் வேறு யாரிடமாவது இருக்கிறதா? அல்லது ப்ரோகோட் மாதிரி யாராவது வம்புக்கு வருவார்களா? என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்துவிட்டு எந்தச் சிக்கலும் இருக்காது என்று தெரிந்துகொண்டபின்,ப்ரோ க்ளப் என்கிற பெயரை அறிவிக்கத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Related Posts