October 30, 2025
சினிமா செய்திகள்

பிக்பாஸ் 6 வெற்றியாளர் அசீம் – நாளை அறிவிப்பு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.ஐந்து பாகங்கள் முடிந்து ஆறாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

நூறுநாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

நாளை (சனவரி 22,2023- ஞாயிற்றுக்கிழமை) பிக்பாஸ் ஆறாவது பாகத்தின் நிகழ்ச்சியின் வெற்றியாளரை அறிவிக்கும் இறுதி நாள் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இப்போது அந்த பிக்பாஸ் வீட்டில் அசீம், விக்ரமன், மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

இவர்களில் வெற்றியாளர் யார்? என்பதில் அசீம் மற்றும் விக்ரமன் இடையே கடும் போட்டி இருப்பதாகவும் விக்ரமனுக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பதால் அவர்தான் வெற்றி பெறுவார் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழுவினரின் முடிவு மற்றும் இரசிகர்கள் போட்ட ஓட்டு ஆகியனவற்றின் அடிப்படையில் அசீம் தான் அதிக அளவிலான ஓட்டுகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியான இடத்தில் விக்ரமன் இருக்க மூன்றாவது இடத்தை ஷிவின் பெற்று இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நாளை நடக்கும் இறுதி நிகழ்ச்சியில் அசீமை வெற்றியாளராக அறிவிப்பது உறுதி என்றும் சொல்கிறார்கள்.

Related Posts