சினிமா செய்திகள்

பொன்மகள் வந்தாள் படத்துக்கு பாரதிராஜா கே.வி.ஆனந்த் அட்லி சமுத்திரக்கனி பாராட்டு

ஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியத் திரையுலகில் திரையரங்குக்கு வராமல் ஓடிடி எனப்படும் இணைய தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29 ஆம் தேதி இணையதளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தைப் பிரத்யேகமாகப் பார்த்த பிரபல இயக்குநர்கள் அப்படம் பற்றிப் பாராட்டிப் பேசியிருக்கிறார்கள். அவை பற்றிய விவரம்….

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு….

பொன்மகள் வந்தாள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.இறுக்கமான, அழுத்தம் நிறைந்த திரைக்கதை கொண்ட நல்ல த்ரில்லர் படமாக அமைந்திருக்கிறது. உலக வரலாற்றில் முதல்முறையாக உங்கள் இல்லங்களுக்கே வரவிருக்கிறது. கண்டுகளியுங்கள்.

இயக்குநர் நடிகர் சமுத்திரக்கனி….

பொன்மகள் வந்தாள்… ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய திரைப்படம். பெண்மை காப்போம்… கிரியேட்டிவ் டீம் & ஜோதிகா மேடம்.. வாழ்த்துக்கள்…!

இயக்குநர் கே.வி.ஆனந்த்…

ஜோதிகா நடிப்பு மிகவும் சிறப்பு கதாபாத்திரத்தை ஆழமாக உள்வாங்கி நடித்திருக்கிறார். படக்குழுவினருக்குப் பாராட்டுகள்.

இயக்குநர் பாலாஜிமோகன்…

இப்படம் முழுமையான நீதிமன்றக் காட்சிகளுடன் பற்றியெரியும் சமுதாயச் சிக்கலைப் பற்றிப் பேசியிருக்கிறது.படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.

இயக்குநர் அட்லி….

ஆழமான கருத்துகளை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கும் படம். இயக்குநர் பிரெடரிக் மற்றும் ஜோதிகா மேடம் ஆகியோரை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.

இயக்குநர் பாண்டிராஜ்….

ஜோதிகா மேடம் நடிப்பு பிரமாதம், பாக்யராஜ் உள்ளிட்ட ஐந்து ஜாம்பவான்களை திரையில் பார்ப்பது மிகவும் ஆர்வமாக இருந்தது.இக்காலத்தில் சொல்லவேண்டிய மிகவும் உணர்ச்சிப்பூர்வமான கதை.குழுவினருக்கு வாழ்த்துகள்.

இயக்குநர் பாரதிராஜா…

அறியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியாமல் வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம். இயக்குநரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களைக் கலங்கடித்து விட்டது. இந்த “பொன்மகள் வந்தாள்” கண்டிப்பாக சமூகத்தைக் கலங்கடிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

Related Posts