இணையத்தொடர்களில் இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி காமா சோமாவென (காமம்- சோமம்) தொடர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் பலர். ஆனால் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் கொங்குவட்டார மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஓர் அழகான காதல்கதையைச் சொல்லியிருக்கும் படம்தான் அம்முச்சி 2. தலைப்பில்
2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘பதாய் ஹோ’.காலம் கடந்த வயதில் கர்ப்பமாகும் பெண்ணை அவரது பிள்ளைகளும் இச்சமூகமும் எப்படி பார்க்கிறது? அந்தத் தாயும், அவரது கணவரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? என்பதுதான் அந்தப் படத்தின் கதை. அதன் தமிழாக்கம்தான் ‘வீட்ல விசேஷம்’. தொடர்வண்டித்துறையில் டிடிஆராக இருக்கும் சத்யராஜ் – ஊர்வசி தம்பதியினருக்கு திருமண
விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மாமனிதன்.சீனு ராமசாமி எழுதி இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப்படத்தில் முதன் முறையாக இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். ஜூன் 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம்
அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களின் படுதோல்விகளுக்குப் பிறகு இப்போது ஒரு தெலுங்குப் படத்தை இயக்கிவருகிறார் லிங்குசாமி. அப்படத்தைத் தமிழிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதற்காக, தமிழில் குரல்பதிவு செய்யும் வேலைகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றனவாம். இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் கீர்த்திஷெட்டி. இவர் தெலுங்கில் புகழ்பெற்ற நடிகை. இவருக்காகத் தமிழ் பேச நிறைய
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பெங்களூருவைச் சேர்ந்த இனோவேட்டிவ் பிலிம் அகாடமியுடன் இணைந்து 10 படங்களைத் தயாரிக்கிறது. இதனை இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இயக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா ஏப்ரல் 20,2022 அன்று நடந்தது. அவ்விழாவில் பெப்சி மற்றும் இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது….. இயக்குநர்கள் சங்கத்தில் 2500 உறுப்பினர்கள்
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம் வள்ளிமயில். தெலுங்கில் புகழ்பெற்ற நடிகை ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி ராமையா,ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்..ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, படத்தொகுப்பு – ஆண்டனி, கலை
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பிரின்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.இந்தப் படத்தில் மரியா என்கிற உக்ரைன் நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம்
சிவகார்த்திகேயன் இப்போது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்,சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.எஸ்கே 20 என்று சொல்லித் தொடங்கப்பட்ட இந்தப்படத்துக்கு பிரின்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது.இந்தப் படத்தினை தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற ஜதிரத்னலு பட
ஹரி இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் யானை. பிரியாபவானிசங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் அம்முஅபிராமி, தலைவாசல் விஜய், சஞ்சீவ்,ராஜேஷ் உட்பட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல்
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள “வீட்ல விசேஷம்” திரைப்படத்தின் இசை வெளியீடு ஜூன் 10, 2022 அன்று நடைபெற்றது. ஆர்.ஜே..பாலாஜி-என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ பிராஜெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மாபெரும் வெற்றிபெற்ற இந்தித் திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ மொழிமாற்றான இந்தப்





















