மாமனிதன் படம் வெளியீடு – மூத்தோர்களுக்கு சீனுராமசாமி மலர்வணக்கம்
விஜய்சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் மாமனிதன்.சீனு ராமசாமி எழுதி இயக்கியிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப்படத்தில் முதன் முறையாக இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
ஜூன் 24 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இப்படத்தை வெளியிடுகிறார்.
இந்தத் தருணத்தில் தமிழக திரைத்துறையில் முன்னோடிகளாக மக்களால் இன்றும் நினைக்கப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் சிலைகளுக்கு இயக்குநர் சீனுராமசாமி மலர் மரியாதை செய்தார்.
இதுபற்றி அவர் கூறும் போது,
இந்தத் தமிழ் சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக்கு நன்றி கூறும் விதமாக என் அன்பை மலர்களாகச் சமர்ப்பித்தேன் என்றார்.










