சினிமா செய்திகள் நடிகர்

நடிகர் ஆர்யா தம்பி ரகசிய திருமணம்

நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா. அவரும் நடிகர்தான்.

புத்தகம்,அமரகாவியம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் . இப்போது சந்தனதேவன் உட்பட ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு ஜூன் 17 அன்று திருமணம் நடக்கிறது.

ஆர்யாவுக்கு நெருக்கமான நடிகர்கள் மற்றும் உறவினர்களை மட்டும் அழைத்து திருமணம் செய்கிறார்களாம்.

ஆர்யாவைப் பொறுத்தவரை எல்லோருடனும் கலகலப்பாகப் பழக கூடியவர். அப்படிப்பட்டவர் இவ்வாறு மிக எளிமையாக, ரகசியமாக தம்பியின் திருமணத்தை நடத்துவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Posts