சினிமா செய்திகள்

அருள்நிதி செய்த அதிரடி – சார்ந்தோர் அனைவரும் மகிழ்ச்சி

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் டிமாண்டி காலனி. 2015 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்துக்குப் பிறகு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார் அஜய் ஞானமுத்து.

சுமார் 7 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாகவும் அதிலும் அருள்நிதியே கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டது.அந்தப் படத்தை அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கி என்பவர் இயக்குகிறார் என்றும் இயக்குநர் அஜய்ஞானமுத்துவே தயாரிக்கிறார் என்றும் சொன்னார்கள்.

இதெல்லாம் அஜய்ஞானமுத்து இயக்கிய கோப்ரா படம் வெளிவருவதற்கு முன் இருந்த நிலை.

இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

கோப்ரா படம் எதிர்பார்த்த மாதிரி வெற்றி பெறவில்லை என்றதும், அஜய்ஞானமுத்துவை நம்பிப் பணம் தர யாரும் முன்வரவில்லையாம்.

இதனால் டிமாண்டி காலனி 2 படத்தைத் தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

செய்தியறிந்த நாயகன் அருள்நிதி, தங்கள் நிறுவனத்திலேயே அந்தப்படத்தைத் தயாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார். அதோடு அந்தப்படத்தை அஜய்ஞானமுத்துவே இயக்கவேண்டும் என்றும் அதிரடி நிபந்தனை விதித்திருக்கிறார்.

அதை அஜய்ஞானமுத்துவும் ஏற்றுக்கொண்டாராம்.

எனவே, அஜய்ஞானமுத்து இயக்கத்திலேயே டிமாண்டி காலனி 2 படம் தொடங்கவிருக்கிறதாம்.

இந்தப்படத்தை இயக்குவதாகச் சொல்லப்பட்ட வெங்கிக்கும் வேறொரு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டதாம். இதனால் சார்ந்தோர் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.

Related Posts