சினிமா செய்திகள்

தனுஷ் 50 படத்தில் அமலாபால்

நடிகர் தனுஷ் தற்போது, அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.

இதைத் தொடர்ந்து, தனுஷின் 50 ஆவது படம் தொடங்கவிருக்கிறது.அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் இருக்கிறார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப்கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அவர்களோடு காளிதாஸ் ஜெயராமும் சேர்ந்திருக்கிறார்.

இந்தப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கவிருக்கிறார்களாம்.

அமலாபால், அபர்ணாபாலமுரளி மற்றும் துஷாராவிஜயன் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அமலாபால் நடிக்கிறார் என்றதும் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். சந்தீப்கிஷனுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள்.

அப்படியானால் தனுஷுக்கு ஜோடி? அபர்ணாபாலமுரளிதான் தனுஷின் இணையராக நடிக்கவிருக்கிறாராம்.

இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னைக்குள்ளேயே பெரிய இடம் இருந்தால் அங்கே அரங்கம் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தலாம் என்று முடிவு செய்து தேடிப்பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்தமாதிரி இடம் கிடைக்கவில்லை என்பதால் இப்போது, சென்னைக்கு மிக அருகில் ஓரிடம் பிடித்து அங்கே மிகப்பெரிய அரங்கம் அமைக்கும் வேலைகள் தொடங்கி நடந்துகொண்டிருக்கிறது.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts