இதை நீங்க பண்ணினீங்களான்னு பிரமிப்பா கேக்கறாங்க – இயக்குநர் ட்ரஸ்டினா ஐசக் மகிழ்ச்சிப் பேட்டி
அறிமுக இயக்குநர் ட்ரஸ்டினா ஐசக் இயக்கத்தில் வெளியாகியுள்ள தனிப்பாடல் ‘முதல் முதலாய்’. இப்பாடலை ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் எழுதி இசையமைத்துள்ளார்.ஜி.வி.பிரகாஷ்குமார் பாடியிருக்கிறார்.ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இதில் ரிஷி தேவா மற்றும் கைரா ஆகிய இருவரும் இணைந்து நடனமாடி இருக்கிறார்கள்.இவர்களில் ரிஷி தேவா,நடிகர் பிரபுதேவாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

rishi deva – kyraa
சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப்பாடல் எவ்வித விளம்பரமும் இல்லாமல் வெளியான பத்துநாட்களுக்கு ஒரு மில்லியன் பார்வைகளைத் தாண்டி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதல் முதலாய் பாடலை உருவாக்கிய இயக்குநர் ட்ரஸ்டினா ஐசக் கிடம் ஒரு பேட்டி வேண்டும் என்று கேட்டபோது, இதுதான் என் முதல் பேட்டி என்று மகிழ்ச்சியாகப் பேசினார்.
முதல் முதலாய் அவர் பேட்டி…
1. உங்களைப் பற்றி ஓர் அறிமுகம்…
நான் ஒரு டாக்டர்.யுகேல படிப்ப முடிச்சேன்.டாகடருக்குப் படிச்சாலும் சினிமா மீது பெரிய ஆர்வம்.நீ டைரக்டர் மெட்டீரியல்னு நண்பர்கள் சொன்னாங்க.அதனால் இங்க வந்து அஸிஸ்டெண்ட் டைரக்டரா வொர்க் பண்ண டிரை பண்ணினேன் டைரக்டர் .ஹரேகிருஷ்ணா அப்புறம் டைரக்டர் பாலா சார்கிட்ட கொஞ்சநாள் வேலை செஞ்சேன்.அதுக்கப்புறம் யாத்ரா என்கிற குறும்படம் இயக்கினேன்,இரண்டே கேரக்டர்கள வச்சு எடுத்தேன்.அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுது.அதனால ஒரு தன்னம்பிக்கை வந்தது.அதுக்கப்புறம் நானே படம் இயக்குவதற்காக கதைகள் எழுதத் தொடங்கினேன்.
2.இந்த ஆல்பம் செய்யும் எண்ணம் வந்தது எப்படி? எங்கிருந்து தொடங்கியது?
ஒரு தயாரிப்பு நிறுவனத்துல கதை சொல்லி ஓகே ஆகியிருந்தது.அது லவ் ஸ்டோரி. அதுக்காக பாடல்கள் தேடிக்கொண்டிருந்தபோது இந்தப்பாடல் கேட்க வாய்த்தது.கேட்டதும் ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது.என் படத்துக்காகத்தான் கேட்கப் போனேன்.பாடல் மிகவும் ஈர்த்ததால அத ஆல்பமா பண்ணலாம்கிற எண்ணம் வந்தது.அப்படியே செஞ்சோம். இதுக்கு மியூசிக் பண்ணின ரவிச்சந்திரன் சார் ஒரு ஜீனியஸ்.அதுக்கு முன்னாடி அவர பார்த்ததுகூட இல்ல.பாட்ட கேட்டப்புறம் அவரோட சேர்ந்து ஆல்பம் தொடர்பா வேலைகள் பார்க்கும்போது அவர் அதை மெருகேத்த செஞ்ச ஒவ்வொண்ணும் சூப்பரா இருந்தது.

trustina issac with team
3.நடிகர் நடிகை தேர்வு செய்தது பற்றி?
இந்தப் பாட்டுக்கு ஒரு ஃப்ரெஷானா யங் டேலண்ட வேணும்னு தேடினேன்.நிறையப் பேரைச் சந்திச்சேன். அப்போ எதேச்சையாதான் பிரபுதேவாவுடைய சன் ரிஷியோட ஒரு பிக்சர் பார்த்தேன்.அந்த ஒரு க்ளிப் பார்த்தவுடனே சட்டென இவர்தான் என முடிவு பண்ணினேன். வசீகரிக்கும் முகம்,ஆர்வம் நிரம்பிய கண்கள் என பார்த்தவுடன் பிடித்துப்போனார்.அவரையே தேர்வு செய்துவிட்டோம்.அதேமாதிரிதான் பல பெண்களைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் கைரா வந்திருந்தாங்க.அவரை தனியாவும்,ரிஷியோட ஜோடியாவும் ஸ்கீரின் டெஸ்ட் பண்ணினோம்.பொருத்தமா இருந்தது.அவங்களயும் செலக்ட் பண்ணிட்டோம்.
4.ஜீ.வி.பிரகாஷ் உடன் பணியாற்றிய அனுபவங்கள்?
ஜி.வி.சார் க்ரேட் சிங்கர், க்ரேட் மியூசிசியன்ங்கிறது எல்லோருக்கும் தெரிந்த விசயம்.எனக்கு அவர் பாடல்கள் பிடிக்கும்.மயக்கம் என்ன படப்பாடல்கள் உட்பட நிறையப் பாடல்கள் மிகவும் பிடித்தமானவை.அவர் இந்தப்பாட்டோட மூடுக்கேத்த மாதிரி ஹஸ்கியா சென்சேஷா பாடினார்.அந்தமாதிரி அவர் பாடியது ரொம்ப ரொம்ப சூட்டபிளா இருந்தது.இதுமாதிரி அவர் பாடினதே இல்லன்னு நினைக்கிறேன். இதுல ஒரு ஸ்பெஷல் டோன் கொடுத்து அவர் பாடினார். ஓர் இளைஞனின் பார்வையிலான அந்த டோன் ரொம்ப பொருத்தமா இருந்தது.அவரோட ஒர்க் பண்ணினது எனக்கு ரொம்ப சந்தோசம்.
5.படப்பிடிப்பு அனுபவங்கள்? எங்கெங்கே நடந்தது?
இதுல பிரபுதேவா சார் சன் இருக்கறதால கோரியோகிராபி ரொம்ப முக்கியமா இருக்கணும்னு நினைச்சோம்.ஏன்னா ஆடியன்ஸ் அத எதிர்பார்ப்பாங்க இல்லையா?.சுரேன் கோரியோகிராபி பண்ணினார்.அதுல,ஹிப்ஹாப் மற்றும் ராப் எலிமெண்ட்ஸ் நிறைய இருந்தது.வெஸ்டர்ன் கைண்ட் ஆஃப் டான்ஸா இருந்தது.இத ரெகுலரா இல்லாம வித்தியாசமா ஷூட் பண்ணனும்னு நினைச்சோம். அதுக்கு பாண்டிச்சேரி பேக்ட்ராப் சரியா இருக்கும்னு தோணுச்சு.அதனால் அங்க ஷூட் பண்ணினோம்.உத்தண்டியில ஓர் அழகான வீட்டுல ஷூட் பண்ணினோம்.அப்புறம் ஈசிஆர்ல கொஞ்சம் ஷூட் பண்ணினோம்.
6. குறைவான நடிகர்களை வைத்துக்கொண்டு திரை நிறைய ஆட்கள் இருப்பதுபோல் வடிவமைத்தது எப்படி?
ஒரு ப்ரேமுக்குள்ள என்ன என்ன இருக்கணும்கிறதுல நானும் டிஓபி குருதேவ் சாரும் ரொம்ப க்ளியரா இருந்தோம்.ஒரு வீட்டுக்குள்ள இருக்கிற கலர் பேலட்டுக்கேத்த மாதிரி பொருட்களைத் தேர்ந்தெடுத்து வைத்தோம்.பார்க்கும்போதே யூத் ஃபுல்லா இருக்கிற மாதிரியான மெட்டீரியல்ஸ் உள்ள இருக்கணும்னு நான்,டிஓபி,ஆர்ட் டைரக்டர் ஆகிய எல்லோரும் முடிவு பண்ணினோம்.அப்படி யோசிச்சு செஞ்சதால அந்த லுக் க்ரேட்ஃபுல்லா இருந்தது.நானே காஸ்ட்யூம் டிசைனும் பண்ணினேன்.ரிஷிக்கு கியாராவுக்கும் எதெல்லாம் சூட்டபிளா இருக்கும்னு பார்த்துப் பார்த்துப் பண்ணினேன்.இப்படியெல்லாம் செஞ்சதுக்கு இன்னிக்கு நல்ல பலன் கிடைச்சிருக்கு, நிறைய பாராட்டுகள் கிடைக்கின்றன.
7.காதல் துள்ளல் பாடலில் இவ்வளவு ஆழ்ந்த சோகம் ஏன்?
லவ்னா பாட்டு டான்ஸுனு ஜாலியா மட்டும் இருக்காது சார்.அதுல இழப்பு இருக்கும்.அதனால பெரும் வலி இருக்கும்.எல்லாம் கலந்ததுதான் லவ்.அந்த பெயின் கொஞ்சம் இருக்கணும்னு நினைச்சோம்.நிறையாவும் வைக்கல,சில ஷாட்ஸ்தான் வச்சிருக்கோம்.அதை நுட்பமா பார்த்து பலர் சொல்லும்போது சர்ப்ரைஸா இருக்கு.
8.இதுபோன்ற ஆல்பங்கள் பொருளாதார ரீதியாக பலன் தருகின்றனவா? உங்களுக்கு எப்படி?
ஆல்பங்கள் மற்றும் இண்டிபெண்டண்ட் மியூசிக் எல்லாம் இப்ப பெரிசா வளருகிற காலமா இருக்கு.அதுக்கு ஆடியன்ஸ் முக்கியத்துவம் கொடுக்கறாங்க.இப்ப இந்தப் பாடல்ல நான் உட்பட எல்லாரும் புதுமுகங்கள்.ஆனா பாடல் வெளியாகி பத்துநாட்கள்ல ஒரு மில்லியன் பார்வைகள் தாண்டியிருக்கு.எகனாமிக்லாவும் இது ப்ளஸ்தானே.
9.ஆல்பம் திரைப்படம் இயக்குவதற்கான முன்னோட்டமா? வழித்தடமா?
இந்த ஆல்பம் பண்ணினது எனக்கு நிறைய வாய்ப்புகள் உருவாக்கியிருக்கு.எல்லாரும் நீங்கதான் இதை பண்ணினீங்களான்னு பிரமிப்பா கேக்கிறாங்க.என்னைப் பொறுத்தவரை, ஆல்பமோ, குறும்படமோ எதுவா இருந்தாலும் அது அதை உருவாக்குகிறவருடைய திறமையை வெளிப்படுத்தக்கூடியதாதான் இருக்கும்.அது அவங்கள அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைச்சுகிட்டுப்போகும்.
10.அடுத்த முயற்சி குறித்து? திரைப்படம் இயக்கும் திட்டமிருக்கிறதா? அதற்காகத் தயாராகியிருக்கிறீர்களா?
நான் சினிமா பண்ணனும்தான் வந்திருக்கேன்.சில தயாரிப்பாளர்கள் கிட்ட பேசியிருக்கேன்.ஒரு நல்லகதையை நம்பி என் திறமையை நம்பி யார் வந்தாலும் அவங்க கூட ஒர்க் பண்ணுனும்னு இருக்கேன்.என்ன நடக்குதுன்னு பார்க்கணும்.அப்புறம், உடனடியா மியூசிக் டைரக்டர் ரவிச்சந்திரர் மற்றும் இதே டீமோட இணைந்து இன்னொரு பாடல் பண்ணலாம்னு ஒரு எண்ணமும் இருக்கு.
– கோபால்











