முடிவுக்கு வந்த இழுபறி – பெரிய விலைக்கு விற்ற நேர்கொண்டபார்வை

மரைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருண்டது. பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.
இந்நிலையில் இன்று (ஜூலை 31) ஜெமினி நிறுவனம் இப்படத்தின் உரிமையைப் பெற்றிருக்கிறது.
இதனால் சுமார் பத்து நாட்களாக இருந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது.
இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமையை சுமார் ஐம்பது கோடி கொடுத்து ஜெமினி நிறுவனம் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மொழிமாற்றுப்படம் என்பதால் இது பெரிய விலை என்று சொல்கிறார்கள்.
தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய திரையரங்கு உரிமையும் இதில் அடக்கம் என்று சொல்கிறார்கள்.
இதனால், ஜெமினி நிறுவனத்திடமிருந்து தமிழகத்தின் பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளின் உரிமைக்காகப் பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.