December 9, 2021
சினிமா செய்திகள்

முரண்டு பிடிக்கும் அஜீத் சமாதானம் செய்ய வந்த போனிகபூர்

அஜீத் இப்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தை இந்தி தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார்.

இப்படம் 2022 பொங்கல் நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கடுத்து அஜீத் நடிக்கும் படத்தை எச்.வினோத்தே இயக்குகிறார் என்றும் அந்தப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டுவருகிறது.

அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் தற்போது நடதுகொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. இயக்குநர் குழு முன் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருக்க அஜீத் வடமாநிலங்களில் துள்ளுந்துப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

இதற்கு நடுவே அடுத்தபடம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கும் அஜீத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அஜீத்தின் சம்பளம் மற்றும் இயக்குநர் ஆகிய இரண்டு விசயங்களிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதாம்.

இதனால், அந்தப்படம் நடக்குமா? என்கிற நிலை ஏற்பட்டுவிட்டதாம்.

எனவே,அஜீத்தைச் சமாதானப் படுத்தி படத்தைத் தொடங்குவதற்காக சென்னை வந்திருக்கிறாராம் தயாரிப்பாளர் போனிகபூர்.

பேச்சுவார்த்தைகள் வெற்றியா? தோல்வியா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்று விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

Related Posts