சினிமா செய்திகள்

நடிகை உமா மகேஸ்வரி திடீர் மறைவு – சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி

மெட்டிஒலி உட்பட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை உமா மகேஸ்வரி. இவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 40.

இவர் பல மாதங்களாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவர் மறைவு சின்னத்திரை பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அவர் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

சின்னத்திரை இயக்குநர் விக்கிரமாதித்தன் கூறியிருப்பதாவது…

எவ்வளவு கிண்டல் செய்தாலும்..குறைசொன்னாலும் சிரிப்பை மட்டுமே பதிலாக தருவாய்..
இனி அந்த சிரிப்பை பார்க்க முடியாது..
மரணம் நிச்சயமானது தான்…
ஆனால்
உனது மரணம் கொடியது…
கண்ணீருடன் வழியனுப்புகிறோம்.

இவ்வாறு அவர் இரங்கல் கூறியுள்ளார்.

Related Posts