நடிகர் ஆர்.கே.சுரேஷ் திடீர் திருமணம்
விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஆர்.கே.சுரேஷ். இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளிவந்த, ‘தாரதப்பட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே இரசிகர்கள் மத்தியில் இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தால் தொடர்ந்து பல படங்களில் எதிர்நாயகனாக நடித்தவர் தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நடிகை திவ்யாவுக்கும் இவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதை அவர்கள் இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன் பிறகு சிறு சிறு கருத்து வேறுபாடுகளால், அவர்களின் திருமணம் நின்றுபோனது.
இந்நிலையில், ஆர்.கே. சுரேஷுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் மது என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.இரகசியமாக நடந்த திருமணத்தில் வெறும் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டார்களாம்.
இதுதொடர்பாக ஆர்.கே.சுரேஷ் கூறியிருப்பதாவது…..
எனது மகிழ்ச்சியான தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஆம், நான் திருமணம் செய்துகொண்டேன். உங்கள் அன்பு, ஆசீர்வாதங்கள் மற்றும் ஆதரவுக்கு மிக்க நன்றி! எனது தனியுரிமையை மதிக்க அனைவரையும் வேண்டுகிறேன்
என்று கூறியுள்ளார்.











