ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் நாயகி யார்?
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 அன்று வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து,ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளியையொட்டி நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இப்போது அவர், ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துவருகிறது.
இப்படத்துக்கு அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதற்கான வேலைகளும் தற்போதே தொடங்கியுள்ளதாம். முதல்கட்டமாக நாயகி தேர்வு நடந்துகொண்டிருக்கிறதாம்.
அதற்காக இரண்டு நாயகிகள் பரிசீலனையில் இருக்கிறார்களாம்.
தமிழில் விஜய்யின் பீஸ்ட் மற்றும் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ்பெற்றிருக்கும் பூஜாஹெக்டேயை ஒப்பந்தம் செய்யலாம் என்றும், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நிறையப் படங்கள் நடித்திருப்பவரும் சீதாராமம் படத்தின் மூலம் தமிழ்நாட்டு இரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமான மிருணாள்தாகூரை ஒப்பந்தம் செய்யலாம் என்று இரண்டு கருத்துகள் பேசப்படுகின்றனவாம்.
இருவரில் ஒருவருக்கு கதாநாயகனின் ஆதரவும் இன்னொருவருக்கு இயக்குநரின் ஆதரவும் இருக்கிறதாம். இறுதியில், படப்பிடிப்பு தொடங்கும்போது யாருடைய தேதிகள் ஒத்துப்போகிறதோ அவரையே ஒப்பந்தம் செய்துவிடலாம் என்கிற முடிவு எட்டப்பட்டிருக்கிறதாம்.
நாயகி தேர்வில் தமிழ்நாட்டைத் தாண்டி யோசிப்பதன் மூலம் இது பன்மொழிப்படமாக உருவாகவிருக்கிறது என்பதை அறியமுடிகிறது.











