சினிமா செய்திகள்

பிரபல இந்தி நடிகர் தற்கொலை

நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.இவர் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 34.

இவர் பாலிவுட்டில் கை போ சே என்ற படம் மூலம் அறிமுகமானார். கடைசியாக சிச்சோர் படத்தில் நடித்தார்.எம்.எஸ்.தோனி படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

இவரது “தில் பேசாரே” என்ற படம் மே 8 ஆம் வெளியாவதாக இருந்தது.கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

ஏற்கெனவே பிரபல இந்தி நடிகர்கள் இர்பான் கான், ரிஷிகபூரை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ள பாலிவுட் உலகம் தற்போது இவரைப்போன்ற ஒரு சிறுவயது நடிகரையும் இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

இவரது தற்கொலை அதிர்ச்சி ஏற்படுத்திய சூழ்நிலையில் ஏன் தற்கொலை போன்ற விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

ரியா கபூரை இவர் காதலித்து வந்ததாக வதந்திகள் உள்ளன.

இந்நிலையில் இவர் தன் பந்த்ரா இல்லத்தில் தூக்கில் தொங்கியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நடிகரின் மறைவுக்கு பலதரப்புகளிலிருந்தும் இரங்கல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

அதேநேரம், சில நாட்களுக்கு முன் இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது. இதனால் இம்மரணம் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.

Related Posts