சினிமா செய்திகள்

விஜய் 65 படத்தின் இன்னொரு நாயகி உறுதிசெய்யப்பட்டார்

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம்.இது விஜய்யின் 65 ஆவது படமாகும்.

விஜய்யும் ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணைகிறார்கள் என்றதுமே அவர்களுடைய முந்தைய வெற்றிப்படமான துப்பாக்கியின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று பரவலாகச் சொல்லப்பட்டது.

துப்பாக்கி படத்தில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால் விஜய் 65 படத்திலும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டதால் அது துப்பாக்கி 2 தான் என்பது உறுதியாகிவிட்டதாகச் சொன்னார்கள்.

ஆனால், இது துப்பாக்கி 2 அல்ல என்றும் இது முழுக்க முழுக்க புதிய கதை என்றும் சொல்கிறார்கள்.ஏற்கெனவே பல இரண்டாம் பாகக் கதைகள் படமாகிக் கொண்டிருப்பதால் இந்தப்படத்துக்குப் புதியகதை வைத்திருக்கிறேன் என்று முருகதாஸ் சொல்லிவிட்டாராம்.

இந்தப்படத்துக்கு கைதி, மாஸ்டர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இந்தப்படத்தில் காஜல் அகர்வாலோடு, தெலுங்கில் புகழ்பெற்றிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே இன்னொரு நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை போலும்.

அதனால், இப்போது இன்னொரு நாயகியாக நடிக்க மடானோ செபாஸ்டினை தேர்வு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகிய எல்லோருக்கும் இதில் உடன்பாடு என்பதால் இது உறுதி என்று சொல்லப்படுகிறது.

Related Posts