சினிமா செய்திகள்

ஒரு கோடியே முப்பது இலட்சம் – கொரோனா நிவாரண நிதி கொடுத்தார் விஜய்

கொரொனா சிக்கலால் தமிழ்த்திரைப்படத்துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள், துணை நடிகர்கள் உள்ளிட்டோர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் நடிகைகள் உதவவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.அஜீத் ஒரு கோடியே முப்பத்திரெண்டரை இலட்சம், ரஜினிகாந்த் 50 இலட்சம், கமல் 10 இலட்சம் நயன்தாரா 20 இலட்சம் ஆகியன உட்பட ஏராளமானோர் நிதி கொடுத்தனர்.

இந்தி, தெலுங்கு நடிகர்களும் நிறைய உதவிகள் செய்துவருகின்றனர்.

தமிழகத்தில் நடிகர் விஜய் எந்தப் பங்களிப்பும் செய்யாமல் இருந்தார். இது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது.

இந்நிலையில், இன்று விஜய் ரசிகர் மன்றத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பொன்றில், விஜய் கொரோனா நிவாரண நிதியாக ஒரு கோடியே முப்பது இலட்சம் நிதி வழங்கியிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதில், பிரதமர் நிவாரண நிதிக்கு 25 இலட்சம்,தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ ஐம்பது இலட்சம்,ஃபெப்சி அமைப்புக்கு ரூ 25 இலட்சம், கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ 10 இலட்சம்,கர்நாடக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 5 இலட்சம், ஆந்திரா,தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ 5 இலட்சம் வழங்கப்பட்டிருக்கிறதாம்.

ஆக மொத்தம் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி கொடுத்திருக்கிறார்.

Related Posts